கற்க கசடறக் கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்குத் தக
கோட்டை மாநகரம் என்று போற்றப்படும் வேலூர் மாவட்டத்தின் கோவில்கள் நிறைந்த குடியேற்ற வட்டத்தில் முப்பெரும் தேவியருள் திருமகள் என்னும் பெயரை தன்னுள்அடக்கி அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி என்னும் பெயரில் 04.06.1964 ஆம் ஆண்டு துவக்கப்பெற்றது இக்கல்லூரி.
உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ் மொழி என்பது உலகறிந்த ஒன்று. அவ்வகையில் மொழிப்பாடமாக தாய்மொழி, ஏறக்குறைய 48 ஆண்டுகள் தமிழை கற்பித்து வந்தனர். காலத்திற்கேற்ப பலதுறைகள் வரவேற்கப்பெற்றது. அவ்வகையில் 2012-2013 கல்வியாண்டில் தமிழை முதன்மை பாடமாக்கொண்டு இளங்கலைத் தமிழ் எனும் தனித்துறை தொடங்கப்பெற்றது. மேலும் 2014 ஆம் ஆணடு “முதுகலைத்தமிழ்” பாடப்பிரிவும், 2018 ஆம் ஆண்டு இளம் முனைவர் பாடப்பிரிவும் அறிமுகப்படுத்தப்பட்டு தற்பொழுது 223 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
“கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்ற முதுமொழியை மெய்ப்பிக்கும் வகையில் இக்கல்லூரியும் தமிழ்த்துறையும் இருகண்களாய் நின்று மாணவர்களை வழி நடத்தி வருகின்றன என்பதில் பெருமை கொள்கிறது தமிழ்த்துறை.
தமிழ்துறையின் நோக்கம்
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே
எனும் முதுமொழிதனை எங்கள் சிரத்தின் மேல் ஏற்றி ஏழை எளிய மாணவர்களை உயரச்செய்யும் நோக்கில், உயர்த்தி பிடிக்கும் ஏணிகளாய் நின்று உழைப்பதே இத்துறையின் முதன்மை நோக்கமாகும்.
தமிழ்ச் சார்ந்த அறிவுமட்டுமில்லாமல் பிறகலைசார்ந்த அறிவும் தமிழ்த்துறை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் நோக்கோடு இத்துறை செயல்படுகிறது. தமிழ் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் போன்றவற்றை படைக்கும் ஆற்றலை உருவாக்கும் வகையில் இத்துறையால் மாணவர்கள் வழிநடத்தப்படுகின்றனர்.
தமிழிலக்கியத்தில் பொதிந்து கிடக்கும் வாழ்வியற் செய்திகளும் குறிப்புகளும் உலக மக்களுக்கு உயர்வை ஏற்படுத்தும் என்பதை மையமாகக்கொண்ட பன்னாட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகள், வினாடிவினா, தேசியகருத்தரங்குகள், மாணவர்களுக்கு படைப்பாற்றலை வெளிப்படுத்தும் களமாக சிறுகதை, புதுக்கவிதை, மரப்புக்கவிதை, ஒவியங்களைவரைதல், பேச்சுப்போட்டி, நாடகம் இயற்றுதல், நாடக நடிப்புகலை போன்ற நிகழ்வுகளை ஒருங்கிணைத்து தமிழரின் பல்வேறு பரிமாணங்களை வளர்த்தெடுப்பதே இக்கல்லூரி தமிழ்துறையின் முதன்மை நோக்கமாக அமைந்துள்ளது. இந்நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றி வருவதில் பெருமைகொள்கிறது தமிழ்த்துறை.
துறையின் சிறப்பு அம்சங்கள்
தமிழ்த்துறையில் பயிலத்தொடங்கும் அத்துனை மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவ்வாற்றலை உலகறியச்செய்து வெற்றி கண்டுள்ளோம் என்பதில் மகிழ்ச்சி
தமிழ்த்துறையில் ஆண்டுதோறும் தமிழவை விழாநடத்தி மாணவர்களுக்கு பேச்சுக்கலை, எழுத்துக்கலை, கிராமியக்கலை, நாட்டுப்புறக்கலை போன்றகலை ஆர்வம் தூண்டப்பட்டுவருகிறது.
தமிழ்த்துறையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல்விழா சிறப்பிக்கும் போது மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுபோட்டிகளும் நடத்தப்படுகிறது.
மாணவர்கள் NCC/NSS போன்ற இயக்கங்களிலும் பங்கேற்று தன்னையும் தன் நாட்டையும் பாதுகாக்கும் அளப்பறிய பணியை திறம்பட செய்து வருகின்றனர்.
முதுகலைமாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு சிறந்த கட்டுரையை சமர்ப்பிக்கின்றனர். தன்னுடைய இறுதிபருவத்தில் ஏதேனும் ஒரு பாடப்பகுதியை ஆராய்ந்து அதனை ஆய்வேடாக சமர்ப்பித்து பல்கலைகழகம் நடத்தும் வாய்மொழித் தேர்விலும் சிறந்த முறையில் பங்குகொள்கின்றனர்.
பொற்குடத்திற்குபொட்டு வைத்தார் போல் மேலும் ஓர் சிறப்பு அம்சமாக தமிழ்த்துறையில் அனைத்து கௌரவவிரிவுரையாளர்களும் பல்கலைக்கழக மானியக்குழு விதித்துள்ள தகுதியை பெற்றுள்ளனர்.
Staff Details for Tamil
SL. NO
|
NAME OF THE STAFF
|
QUALIFICATION
|
DESIGNATION
|
SHIFT
|
1
|
Dr.
G. RUDRAMOORTHY
|
M.A.,
M.Phil., Ph.D.,
|
GUEST
LECTURER
|
I
|
2
|
Mrs.
T. SANGEETHA
|
M.A., B.Ed., (SET),
|
GUEST
LECTURER
|
I
|
3
|
Dr.
K.THANGADURAI
|
M.A.,
M.Phil., Ph.D., (NET)
|
GUEST
LECTURER
|
I
|
4
|
Mrs.
M.VIDYAMATHI
|
M.A.,
M.Phil. ,B.Ed., (NET & SET)
|
GUEST
LECTURER
|
I
|
5
|
Dr.
G. ESWARI
|
M.A.,
M.Phil., B.Ed., Ph.D.,(NET)
|
GUEST
LECTURER
|
I
|
6
|
Mrs.
S.THAHIRA BEGUM
|
M.A.,
M.Phil.,
|
GUEST
LECTURER (URDU)
|
I
|
7
|
Dr.
S.THAMIZHARASI
|
M.A.,
M.Phil., Ph.D.,(NET)
|
GUEST
LECTURER
|
II
|
8
|
Dr.
P.SAMPATHKUMAR
|
M.A.,
M.Phil., B.Ed., Ph.D.,
|
GUEST
LECTURER
|
II
|
9
|
Dr.
G.SURESH
|
M.A.,
B.Ed., Ph.D.,
|
GUEST
LECTURER
|
II
|
10
|
Dr.
K.SURESH
|
M.A.,M.Phil.,
B.Ed., Ph.D.,(NET), JRF
|
GUEST
LECTURER
|
I
|
11
|
Dr.
R.KUMAR
|
M.A.,
M.Phil., (NET), JRF
|
GUEST
LECTURER
|
I
|